சென்னை: ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் போனின் ஸ்டோரேஜ் திறனை சேமிக்கும் வகையில் ‘Auto-Archive’ எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள். இதன் மூலம் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத செயலிகளின் தரவுகளை இதில் டெலிட் செய்யாமல் அல்லது அந்த செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யாமல் சேமிக்கலாம் என தெரிகிறது. அதே நேரத்தில் ஸ்டோரேஜையும் இதன் மூலம் ப்ரீ செய்ய முடியும்.
இன்றைய டெக் யுகத்தில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தும் சமயங்களில் சிலரது போன்களின் ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிற காரணத்தால் போனின் இயக்கம் ஸ்லோவாக இருக்கும். புதிய செயலிகளை நிறுவ முடியாது.
இதை நிர்வகிக்க பயனர்கள் சில செயலிகளின் ஸ்டோரேஜ்களை மேனுவலாக டெலிட் செய்ய வேண்டி இருக்கும். இதில் சில பயனர்கள் தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்தும் செயலிகளும் இருக்கும். அந்த செயலிகளும் போனின் ஸ்டோரேஜை ஆட்கொண்டு இருக்கும். அந்த செயலிகளை குறிவைத்து இந்த ‘Auto-Archive’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களுக்கு தேவையான நேரத்தில் மீண்டும் அந்த செயலியை நிறுவி, நிறுத்திய இடத்திலிருந்து பயன்பாட்டை தொடர முடியுமா. இந்த அம்சத்தை ஆட்டோ மற்றும் மேனுவல் முறையில் பயனர்கள் பயன்படுத்த முடியும். இருந்தும் இப்போதைக்கு இந்த அம்சம் ஆப் டெவலப்பர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் புதிய செயலியை நிறுவ முயன்றனர், அவர்களின் போன் ஸ்டோரேஜ் நிரம்பி இருக்கும் நேரத்தில் தானியங்கு காப்பக அம்சம் குறித்த தகவலை கூகுள் வழங்கும். அதை தேர்வு செய்வதன் மூலம் போன் ஸ்டோரேஜில் இருந்து பயன்படுத்தப்படாத செயலிகளின் தரவுகள் தானாகவே இந்த அம்சத்தின் கீழ் சேமிக்கப்படும். அதன் மூலம் புதிய செயலியை பயனர்கள் நிறுவி பயன்படுத்தலாம். இதற்கு முன்னர் ஸ்டோரேஜ் இல்லை என்றால் புதிய செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது சில செயலிகளை நீக்குமாறு கூகுள் சொல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.