கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் அதிர்வுடன் கூடிய பெரும் சத்தம் 9 முறை உணரப்பட்டுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம் வட்டம், கீரனூரில் 25-ம் தேதிஅன்று 1.5 மற்றும் ஏப்ரல் 10-ம் தேதி அன்று 3.3 என்ற ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக தேசிய நில அதிர்வு மையம்(National Center Seismology)இணையதளத்தில் பதிவாகியுள்ளது. மேற்காணும் 3.3 என்ற ரிக்டர் அளவே கடந்த 100 ஆண்டுகளில் பதிவாகியுள்ள பெரும் நிலநடுக்க நிகழ்வாகும்.

நிலநடுக்கம் மற்றும் அதனைத்தொடர்ந்து நிகழும் அதிர்வுடன் கூடிய பெரும் சத்தம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கையின் பேரில் மார்ச் 22-ம் தேதி வேலூர் விஐடி(விஐடி) பேராசிரியர் கணபதியும், ஏபரல் 1-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இருந்து புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் துறையின் நான்கு நிபுணர்கள் அடங்கிய குழுவும் சென்னை கூடுதல் தலைமைச் செயலர்/ வருவாய் நிர்வாக ஆணையரால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குழுக்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைபுரிந்து ஒலியதிர்வு உணரப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடி, பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவருடன்ஆலோசனை நடைபெற்றது.

இது குறித்து தெரிவித்த ஆய்வுக்குழுவினர், திண்டுக்கல் மாவட்டம், நிலநடுக்கம் நடைபெற மிகக் குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் அமைந்துள்ளதெனவும், ஒட்டன்சத்திரம் வட்டம், கீரனூரில் 25.03.2022 மற்றும் 10.4.2022 ஆகிய நாட்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதெனவும், இதனால் கட்டிடப் பொறியியல் மற்றும் நிலநடுக்கத்தின் தொழில்நுட்ப கட்டுமானத்தின்படி (இந்திய தரநிலை பூகம்பக் குறியீடு) கட்டுமானம் விரிசல் ஏற்பட்டுள்ளதெனவும், பாதிப்புகள் வேறு ஏதுமில்லையெனவும், அதன் பின்னர் நிலநடுக்கம் ஏதும் பதிவாகவில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

மேலும் பெருத்த ஒலியுடன் கூடிய அதிர்வு நிகழ்வது நிலநடுக்கத்துடன் தொடர்புடையது இல்லை எனவும் இதனால் பொதுமக்கள் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளில் விமானங்கள் மணிக்கு 1200 கிலோ மீட்டர் வேகத்துடன் கடக்கும்போது Sonic Boom என்றழைக்கப்படும் பெரும் சத்தம் கேட்க வாய்ப்புள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் கட்டிட பொறியியல் தொழில்நுட்பத்தின்படியும், பொறியாளர்களின் ஆலோசனையின்படியும் கட்டப்படுவது அவசியமெனவும், இதனால் நில அதிர்வு உள்ளிட்ட அதிர்வுகள் ஏற்படும் போது கட்டிடங்கள் சேதமாவதை தடுக்கவும்

மேலும் சென்னை பேரிடர் மேலாண்மை முகமையால் அறிக்கை செய்யப்பட்டு டெல்லி தேசிய நிலநடுக்கவியல் மையம் (தேசிய நிலநடுக்கவியல் மையம்) மூலம் இந்நிகழ்வு குறித்து தனியே ஆய்வு செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அடிக்கடி உணரப்படும் பெரும் ஒலியுடன் கூடிய சிறு அதிர்வு நிகழ்வு குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்துள்ளதெனவும், மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன் விளக்கமளித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link