புதுச்சேரி :தினமலர்’ ​​நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், கல்வித் திருவிழாவான வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரியில் நேற்று கோலாகலமாக துவங்கியது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற்றனர்.

பிளஸ் 2 முடித்த பிறகு, அடுத்து என்ன படிக்கலாம்… எந்தக் கல்லுாரியில் சேரலாம்… பயிலப்போகும் பாடப் பிரிவு முக்கியமா, கல்லுாரியின் தரம் முக்கியமா… அல்லது இரண்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா… என, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் குழப்பம் ஏற்படுவது இயற்கை.

இதுபோன்ற குழப்பத்தைப் போக்க, முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களை மேம்படுத்தி, மாணவர்களுக்குத் தெளிவான எதிர்காலத்திற்கான ஆலோசனை வழங்கும் வகையில், ‘தினமலர்’ ​​நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், வழிகாட்டி புதுச்சேரியில் நேற்று துவங்கியது.

சித்தன்குடியில் பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் கல்யாண மண்டபத்தில் நேற்று துவங்கிய வழிகாட்டி நிகழ்ச்சி நாளை 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

துவக்க விழாவில், வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கல்வி நிறுவன அரங்குகளை, கோவை ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் டெக்னாலஜி மெக்கானிக் இன்ஜினியரிங் பேராசிரியர் பென் ரூபன் திறந்து வைத்தார்.

வழிகாட்டி கருத்தரங்கினை, ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன்ஸ் மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் டெக்னாலஜி மெக்கானிக் இன்ஜினியரிங் பேராசிரியர் பென் ரூபன், இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா ஆடிட்டர் பார் ராஜேந்திரகுமார், ஐ.சி., எப்.ஐ. எஜுகேஷன் மண்டல தலைவர் சைதன்யா, அரவிந்த் கிருஷ்ணன், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மாணவர்கள் ஆர்வம்

வழிகாட்டி நிகழ்ச்சி காலை, 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், காலை 8.30 மணி முதல், மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஒவ்வொரு ஸ்டால்களாக சென்று பார்வையிட்டனர்.

ஒவ்வொரு கல்லுாரியிலும், என்னென்ன படிப்புகள் உள்ளன, அங்குள்ள வசதிகள், படிப்பிற்கான வேலை வாய்ப்புகள், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஒரே இடத்தில் தெரிந்து கொண்டனர்.

கருத்தரங்கம்

வழிகாட்டி நிகழ்ச்சியில், முற்பகல் மற்றும் பிற்கல் என, இரு வேளைகளிலும் உயர்கல்வி ஆலோசனை கருத்தரங்குகள் நடந்தன. காலை அமர்வில் சி.ஏ., படிப்புகள் குறித்து இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா ஆடிட்டர் ராஜேந்திரகுமார் பேசினார்.

அனிமேஷன் – மீடியா படிப்புகள் குறித்து, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி அனிமேஷன் துறைத்தலைவர் கிஷோர்குமார், காலத்துக்கேற்ற நவீன படிப்புகள் குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் பேசினர்.

மாலை அமர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., துறைகள் குறித்து அம்ரிதா விஸ்வா வித்யாபீடம் பேராசிரியர் சவுந்திரராஜன், அரசு வேலைவாய்ப்பு குறித்து சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி நித்யா ஆகியோர் விளக்கமளித்தனர்.

வங்கிகளில் கல்விக் கடனுதவிகள் குறித்து எஸ்.பி.ஐ., வங்கி ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர் விருத்தாசலம் விவரித்தார்.

பொது அறிவுப்போட்டி

பங்கேற்ற மாணவர்களுக்கு, ‘தினமலர்’ ​​நாளிதழ் சார்பில், பொது அறிவுப்போட்டி நடத்தப்பட்டு, சரியான நிகழ்ச்சியில் விடையளித்தவர்களுக்கு, லேப்டாப், வாட்ச், டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டது.

ஆர்வமாக பங்கேற்ற மாணவ மாணவிகள் அசத்தலாக பதிலளித்து பரிசுகளை வென்றனர். ஒரு லேப்டாப், 2 டேப்லெட், 10 வாட்சுகள் உள்ளிட்ட 13 பரிசுகளை மாணவர்கள் தட்டி சென்றனர்.

அனுமதி இலவசம்

வழிகாட்டி நிகழ்ச்சி இன்று 12ம் தேதி, நாளை 13ம் தேதி வரை நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

வழிகாட்டி நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவன ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு, அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் பெறலாம்.

என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த மெகா கல்வித்திருவிழா அரிய வாய்ப்பு.

உயர்கல்வி நிறுவனங்களில் ‘அட்மிஷன்’ நடைபெறுவது எப்படி, வேலை வாய்ப்பு அள்ளித்தரும் துறைகள் எவை என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்பட்டது.

மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் எவை, கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் எப்படி உட்பட அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த ‘வழிகாட்டி’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்குகின்றனர்.

நுழைவுத்தேர்வு

நீட்’ மற்றும் ஜே.ஐ.ஐ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், ‘கிளாட், நாட்டா, கேட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது.

அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., – ஐ.ஐ.எஸ்.சி., – ஐ.சி.டி., எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ., – ஐ. .ஐ.எஸ்.ஐ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் சந்தேகம் எழுப்பி தெளிவு பெறலாம்.

இணைந்து வழங்குவோ ர்

நிகழ்ச்சியை ‘தினமலர்’ ​​நாளிதழுடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் ஆகியவை முக்கிய பங்களிப்பாளர்களாக வழங்குகின்றன.மேலும், இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா, ஐ.சி.எப்.ஏ.ஐ., பவுண்டேஷன் பார் ஹையர் எஜூகேஷன் கோ-பான்ஸ்சரேக்கேஷன்.

ருசி பால், பிக் எப்.எம்.,-92.7, எஸ்.மீடியா, அக்குவா கிரீன் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

அப்பளிகேஷன் முதல் அட்மிஷன் வரை தகவல்களை அள்ளித் தரும் ‘தினமலர்’ ​​வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை மிஸ் பண்ணாதீங்க…

கருத்தரங்கில் இன்று …

‘தினமலர்’ ​​வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று காலை அமர்வில் கல்வியாளர்கள் அஸ்வின், டேவிட் ரத்தனராஜ் ஆகியோர் உயர் கல்வி குறித்தும், டேட்டா அனலைஸ் குறித்து சாமிநாதன் பேசுகின்றனர்.மாலை அமர்வில், வேலைவாய்ப்பு திறன் கல்வியாளர் சார்லஸ்குட்வின், எதிர்கால பொறியியல் படிப்புகள் குறித்து பென் ரூபின், அனைவருக்கும் ஐ.ஐ.டி., குறித்து ஹரிகிருஷ்ணன் ஆகியோர் விளக்கம் அளிக்க உள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் சேரனுமா

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., மீது எப்போதும் ஒரு கண் இருக்கும். ஐ.ஐ.டி. மாணவர்களை பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் கொத்திக்கொண்டு போய்விடுகின்றன.இதனால், சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் இடையே போட்டி நிலவுகிறது.இதில் சேர, ஜே.ஐ.ஐ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.ஆனால் சென்னை ஐ.ஐ.டி.,யில், ஜே.ஐ.ஐ., தேர்வு இல்லாமலும் பி.எஸ்., டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் போன்ற படிப்புகளில் சேரலாம். இதற்கான வழிகாட்டுதல், வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று மாலை 4.00 மணிக்கு துவங்கும் அமர்வில் கிடைக்கும்.

பரிசு மழை

‘தினமலர்’ ​​வழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில் இரண்டாம் நாளான இன்றும் அசத்தலான பரிசுகள் காத்திருக்கின்றது. கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்பட உள்ளது.

உடனே பதிவு செய்யுங்கள்

‘தினமலர் வழிகாட்டி’ நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. உயர் கல்வி குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு நேரில் விடை காண www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505-74441 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணிலும் உடனே பதிவு செய்யுங்கள்.

இலவச வழிகாட்டி புத்தகம்

வழிகாட்டி கருத்தரங்கில் ‘கியூ.ஆர் கோடு’ வசதி உள்ளது. இதனை ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்தால், உயர்கல்வி தகவல்கள் அனைத்தும் அடங்கிய வழிகாட்டி புத்தகம் பி.டி.எப்., பைலில் இலவசமாக அனுப்பப்படும்.நேற்றைய நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள், ‘கியூ.ஆர் கோடு’ ஸ்கேன் செய்து, வழிகாட்டி புத்தகங்களை பெற ஆர்வம் காட்டினர்.Source link