முதுமலை சென்ற பிரதமர் மோடி அணிந்திருந்த டீ- ஷர்ட் எங்கு தயாராகிறது அதன் விலை என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி முதுமலைக்கு சென்று ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியரை பார்க்கச் சென்றபோது அவர் அணிந்திருந்த கேமோபிளாஜ் டி-சர்ட் அனைவரையும் கவர்ந்தது. சூழலுக்கேற்ற நிறத்தில் தயாரிக்கப்படும் இந்த கேமோப்ளாஜ் டீ- ஷர்ட் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட தனியார் ஆடை நிறுவனம் இந்த டீ-ஷர்ட்டினை வடிவமைத்தது. இவ்வாறு பேசிய எஸ்.சி.எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரமசிவம், தங்கள் நிறுவனம் தயாரித்த ஆடையை பிரதமர் அணிந்தது தங்களுக்கு மிகுந்த பெருமை என்றார்.

உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)

திருப்பூர்

திருப்பூர்

வயநாடு மக்களுடனான உறவை பாஜகவால் ஒருபோதும் பிரிக்க முடியாது- ராகுல் காந்தி சூளுரை

பருத்தி இழைகள் கொண்டு இந்த டீ-சர்ட் தயாரிக்கப்பட்டதாகவும், மலையேற்றம், அட்வெஞ்சர் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது எனவும், வியர்வை உறிஞ்சும் தன்மை மற்றும் குளிர்தாங்கும் திறன் போன்றவை நிறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இத்தனை அம்சங்கள் நிறைந்த பிரதமர் அணிந்திருந்த டீ-ஷர்டின் விலை 699 ரூபாய் மட்டுமே.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link