இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ”சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் தங்களது காயங்களின் மீது மருத்துவர்களை விடக் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்கள் உங்களுக்குக் குணமாகிவிட்டது என்று கூறினாலும் உங்களை நீங்களே பரிசோதித்துவிட்டு எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடும் வகையில் அணிக்குத் திரும்ப வேண்டும்.

6 – 7 மாதங்கள் எந்த போட்டிகளிலும் விளையாடாமல் சிகிச்சை பெறுகிறார்கள். பின் மீண்டும் விளையாட வந்து குறைந்தபட்சம் நான்கு போட்டிகள் கூட விளையாட முடியாமல் மீண்டும் காயமடைந்து பெங்களூருவிற்குச் சென்றுவிடுகிறார்கள். இந்த செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கேப்டன், அணி நிர்வாகம், பிசிசிஐ என்று பலரும் இதில் இணைந்து வீரர்களின் உடல்நலனுக்கு கவனம் செலுத்தும்போது வீரர்கள் பொறுப்பான முறையில் நடந்துகொள்ள வேண்டும். இத்தகைய செயல்களால் பல இளம் வீரர்களை அணியில் எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன” என்று ஆதங்கப்பட்டுள்ளார்.