மருத்துவ குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேவை குறைபாடு ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, ஸ்டேட் பேங்க் மற்றும் யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனி இணைந்து, ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க, நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் , கே. ஆர். புரத்தில் வசிப்பவர், கோவிந்தராஜன், இவர் பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுபெற்ற அலுவலர். இவரது மனைவி சாவித்திரி (57). இவரும் இவரது கணவரும் பாரத ஸ்டேட் வங்கியும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான குரூப் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ. 18,893/- பிரிமியம் இணைந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் சாவித்திரிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது, கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கான தொகையை தருமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டபோது பாலிசி முடிந்துவிட்டது, இன்சூரன்ஸ் கம்பெனி ஆஸ்பத்திரிக்கு பணம் வழங்கவில்லை. அறுவை சிகிச்சைக்காகவும் மருத்துவ செலவுகளுக்காகவும் ரூ.4,90,591/- சாவித்திரி செலவு செய்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
மருத்துவ செலவு செய்த தொகையையும் அதனை வழங்க மறுத்ததால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு கேட்டு சாவித்திரி கடந்த 2018 ஜூலை மாதம் கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டிற்கு விரைந்து விசாரணை செய்வதற்காக மாற்றப்பட்டது.
ஓய்வு பெற்ற பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான குருப் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது என்றும் இதில் இணைந்தவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மட்டுமே மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும், புகார்தாரர் மார்ச் 2016 இறுதியில் இந்த திட்டத்தில் ஓராண்டு காலம் பிரிமியம் செலுத்தியிருந்தாலும், அவருக்கும் 2017 ஜனவரி 15ஆம் தேதியுடன் இன்சூரன்ஸ் முடிவடைந்து விட்டது. 2017 ஜனவரி இறுதியில் புகார்தாருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் மருத்துவ செலவிற்கான தொகையை தாங்கள் வழங்க வேண்டியதில்லை என்று இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில், கோர்ட் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ஏ. ரத்தினசாமி முன்னிலையில், நீதிபதி டாக்டர் ராமராஜ் இந்த வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், புகார்தாரிடம் ஓராண்டுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் பிரிமியத்தைப் பெற்றுக் கொள்ள குரூப் இன்சூரன்ஸ் தொடங்கி இரண்டு மாதம் கழித்து இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்ததால் 10 மாத இன்சூரன்ஸ் காலம் முடிந்துவிட்டது என கூறுவது தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் அவ்வாறு குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் இடையில் இணைந்தால் குழு காப்பீடு தொடங்கப்பட்ட நாள் வரை மட்டுமே காப்பீடு வழங்கப்படும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் புகார் தெரிவிக்கவில்லை, குரூப் இன்சூரன்சில் சேர்ந்த தேதி முதல், இன்சூரன்ஸ் திட்டம் தொடங்கப்படுவதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு 10 மாதத்திற்குள் இன்சூரன்ஸ் பாலிசியை முடித்துக் கொள்வது தவறானது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி காலம் முடிவடைந்தால் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு பாலிசியை புதுப்பிக்குமாறு வங்கிக்கு புகார்தாரர் முறைப்படி விண்ணப்பம் செய்தும், பாலிசியை புதுப்பிக்க வங்கி நிர்வாகம், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்தாமல் விட்ட சேவை குறைபாடு மற்றும் அந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே ஸ்டேட் பாங்க் நிர்வாகமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிர்வாகமும் இணைந்து நுகர்வோருக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: