மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், குரு – சுக ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில். செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையில் கவனம் தேவை.

பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் செயல்படுவீர்கள்.

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும். கஷ்டங்கள் குறையும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி – தனவாக்கு ஸ்தானத்தில் சூரியன், குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில். கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் கவுரவ பிரச்சினை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மனஅமைதி கெடவும் வாய்ப்புண்டு. பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்
கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடு படுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு சகமாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் சூரியன், குரு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுகஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் | இந்த வாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடம் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.





Source link