காஞ்சிபுரத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருதினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 290 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், 2021-22 ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது தொகையினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்‌.

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா,உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பித்ஜெயின்,மகளிர் திட்ட இயக்குநர் கே.கவிதா,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு,தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி,பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.



Source link