மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் புதன் (வ.ஆ), ராகு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் – சப்தம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சனி – விரைய ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் புத்திக்கூர்மையுடன் செய்த செயல்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே தேவையற்ற மனவருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவு. ஆயுதம், நெருப்பு போன்றவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு புத்தூர்மையுடன் செயல்பட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: திருத்தணி முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை –
ராசியில் சுக்ரன் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் சூரியன், குரு – அயன சயன போக ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதால் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

மிதுனம் (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் சூரியன், குரு – லாப ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு – அயன சயன போகம். ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று காலதாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் பலனை தரும்.

உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கைத் துணையிடமும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்கினால் பிரச்சினைகள் தீரும். பணகஷ்டம் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | இந்த வாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடம் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.





Source link