ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 3 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. வெற்றியின் விளிம்பு வரை தோனியும், ஜடேஜாவும் ஆட்டத்தை எடுத்து வந்த நிலையில், கடைசி பந்தில் சென்னை வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​தோனியால் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார் வீரர். ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 38 ரன்கள் எடுக்க கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். அஷ்வின், ஹெட்மேயர் தலா 20 ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி தரப்பில் ஆகாஷ் சிங், துஷார் தேஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

தொடக்க ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார் வீரர். பின்னர் இணைந்த டெவோன் கான்வே – அஜிங்க்யா ரஹானே இணை பொறுப்புடன் விளையாடி 2 ஆவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கான்வே 50 ரன்னிலும், ரஹானே 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 8 ரன்களும், மொயின் அலி7 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த அம்பதி ராயுடு 1 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து இணைந்த ரவிந்திரா ஜடேஜா – தோனி இணை ராஜஸ்தான் பந்து வீச்சை சிக்சர்களை நோக்கி பறக்க விட்டது. கடைசி 5 ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 63 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​இருவரும் சிறப்பாக விளையாடி வெற்றியின் விளிம்பு வரை அணியை கொண்டு சென்றனர். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது தோனியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 3 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணியில் கடைசி ஓவரை திறமையாக வீசிய சந்தீப் சர்மாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link