ருசியான நோன்பு கஞ்சி தயார் செய்வது எப்படி? விளக்கும் புதுக்கோட்டை சேட்புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிஷா ஜும்ஆ பள்ளிவாசலில் 30 ஆண்டுகளாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் போது பருகும் நோன்பு கஞ்சியை செய்துவரும் சேட் நோன்பு கஞ்சி, செய்வது எப்படி? என்பதை நமக்கு விளக்கி சொல்கிறார்.
இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் மாத நோன்பு ஆரம்பமாகிவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஒரு நோன்பு மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்கப்படும். ‘நோன்புக் கஞ்சி’ எனச் சொல்லப்படும் இந்த கஞ்சியை பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகம் செய்வதோடு, பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் அதை அருந்துவார்கள். நோன்புக் கஞ்சி ருசியாக இருக்கும் என்பதாலேயே அது மிகப் பிரபலம். அதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)
ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்பு கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்கள் முதலில் இதை குடித்து தான் புத்துணர்ச்சி அடைவார்கள். அத்தகைய நோன்புக் கஞ்சியை எப்படி தயாரிப்பது என்பதை புதுக்கோட்டை மாவட்ட ஆயிஷா ஜும்ஆ பள்ளிவாசலில் 30 வருடங்களுக்கு மேல் நோன்பு கஞ்சி தயார் செய்து வரும் சேட்டு நம்மிடம் விளக்குகிறது.
முதலில் தேவையான பொருட்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கேரட், வெந்தயம், தேங்காய், நெய், தேவையான அளவு உப்பு ஆகியவை தான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்கள் ஆகும். பெரிய அளவில் செய்தாலும் குறைந்த அளவிலான நோன்பு கஞ்சி செய்தாலும் தரமான பொருட்களை வைத்து தயார் செய்தால் தான் ருசியான நோன்பு கஞ்சி கிடைக்கும்.
முதலில் தேவையான அளவு தக்காளி வெங்காயம் கேரட்டை நறுக்கி கொள்ளவும்.இஞ்சி, பூண்டு விழுதை தயார் செய்து கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பின்னர் அரிசி ,பருப்பு ஆகியவற்றை வேகவைத்து நன்கு வெந்ததும் கிளறி கொள்ள வேண்டும். அதன் பின் அதில் நெய் ஊற்றி அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட் சேர்த்து நன்கு கலந்து இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து தாளித்தால் சுவையான நோன்பு கஞ்சி தயாராகிவிடும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாம் சேர்க்கும் தரமான பொருட்கள் வைத்து தான் சுவையான நோன்பு கஞ்சி தயார் ஆகிறது என்கிறார் ஆயிஷா ஜும்ஆ. பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தயார் செய்து வரும் சேட்டு மாஸ்டர்.
மேலும் இந்த நோன்பு கஞ்சியை வாங்கி செல்லும் மக்களிடம் கேட்ட போது இங்கு செய்யும் நோன்பு கஞ்சி மிகவும் சுவையாக உள்ளது. இங்கு இஸ்லாமியர்களுக்கு மட்டும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் ஆகிய அனைவருக்கும் நோன்பு கஞ்சி தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: