கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரத்துக்குட்பட்ட புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் பிரைமரி, நர்சரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 11-ம் தேதியன்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலை வீட்டுக்கு வரும்போது தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், என்னவென்று கேட்டபோது, ​​பிறப்புறுப்பைக் காட்டி `வலிக்கிறது…’ என்று அழுது துடித்திருக்கிறார். பிறப்புறுப்பில் ரத்தம் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர், உடனடியாக அருகில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் `சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்க வாய்ப்பிருப்பதால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று அங்கிருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட திமுக கவுன்சிலர், ஆசிரியர் பக்கிரிசாமி

கைதுசெய்யப்பட்ட திமுக கவுன்சிலர், ஆசிரியர் பக்கிரிசாமி

அதையடுத்து சிறுமியை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியிடம் பேசிய மருத்துவர்கள், `சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது’ என அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்த அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ​​“ஸ்கூல்ல இருக்குற சார், என்ன தப்பா தொட்டுக்கிட்டே இருந்தாரு… நா வலிக்குதுன்னு சொல்லியும் அவரு விடவேயில்லை” என்று விவரிக்க, நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் போலீசார். சென்று விசாரணை மேற்கொண்டனர்.Source link