2021- 22 காரீப் மற்றும் ராபி பருவங்களுக்கான நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் 2021– 2022 ஆம் ஆண்டின் காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்யப்பட்டது, நிலுவையில் உள்ள 216 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்து 323

உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)

விழுப்புரம்

விழுப்புரம்

மற்றும் 2021-2022 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 508 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 92 ஆயிரத்து 528 விடுவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

2021 2022 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக கடந்த டிசம்பர் மாதம் 2021 -ல் காரீப் பருவத்திற்கு 2 ஆயிரத்து 915 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 38 லட்சம் ரூபாய் 14 ஆயிரத்து 727 ரூபாய், அக்டோபர் 2022 மாதத்தில் நெல் சம்பாவிற்கு 68 ஆயிரத்து 81 விவசாயிகளுக்கு 16.6 கோடி ரூபாய். 771, டிசம்பர் 2022 மாதத்தில் ராபி இதர பயிர்களுக்கு 5 ஆயிரத்து 148 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 839 விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link