ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான முருகபத்தர்களின் அரோகரா பக்தி கோசத்துடன் நடைபெற்றது.
கடந்த 7 ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்த விழாவில் மூன்றாம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள கும்பாபிஷேகம் நடைபெற்றது
மாவூற்று வேலப்பர் கோயில் :-
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் சுயம்புவாக உருவான முருகக்கடவுளை மூலவராக கொண்ட 600 ஆண்டுகள் பழமையான மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இக்கோயிலில் தற்போது கும்பாபிஷேக விழா நடத்த இந்து சமய அறநிலைத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

மாவூற்று வேலப்பர் கோயில்
கும்பாபிஷேக விழாவின் முதல் நாளில் விநாயகர் வழிபாடு நடைபெற்றது . இவ்விழாவில் இரண்டாம் நாள் கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை வேள்வி நடைபெற்றது
இதையடுத்து மூன்றாம் நாள் காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய நிகழ்ச்சி இரண்டாம் கால யாகசாலை வேள்வியுடன் வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்களால் நடைபெற்றது
இவ்விழாவிற்காக உலக சிவனடியார் கூட்டத்தை சேர்ந்த ஆண், பெண் சிவனடியார்கள் கொம்பு வாத்தியம் மற்றும் வலம்புரி சங்குகளை ஊதி கைலாய இசையை இசைத்தனர்
அதனை தொடர்ந்து மூன்றாம் கால யாகசாலை வேள்வி நடைபெற்றது. பின் மாவூற்று வேலப்பர் சாமிக்கு ஆயிரக்கனக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்
இதையடுத்து கோயிலில் கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் வழிபட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தீர்த்தம் பெற்று சென்றனர்.
இவ்விழாவிற்காக தேனி மற்றும் மதுரை மாவட்ட பகுதியிலிருந்து மக்கள் கோயிலுக்கு வந்து செல்லஆண்டிபட்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் மலையில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகளை செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.