ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தற்போது உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு பாதிரியார் பதினைந்து கோவில்களில் பக்தர்கள் மூலம் செலுத்தப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கிழக்கு கோபுர மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் சேலம், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்த தன்னார்வலர்கள் ஆகியோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதையடுத்து, காலை முதல் இரவு வரை உண்டியலில் இருந்த பணம் அனைத்தும் எண்ணப்பட்டது. அதில்1 கோடியே 14 லட்சத்து 55 ஆயிரத்து 825 ரூபாய் பணமும், 92.200 கிராம் தங்கம், 3.250 கிலோ வெள்ளியும், வெளிநாட்டு பணம் 83 நோட்டுகள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் பதினைந்து நாட்களில் இருந்து கிடைத்த உண்டியல் பணம் ஒரு கோடியை தாண்டியது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: