கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் சாலையில் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில், தெரு நாய்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாகவும், சாலையின் குறுக்கே அடிக்கடி சென்று இருசக்கர விபத்துகள் ஏற்படுவதாகவும், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக பட்டீஸ்வரம் ஊராட்சி சுற்றித்திரியும் தெரு நாய்களை நள்ளிரவில் சுருக்கு கம்பி வைத்து சிலர் பிடித்து கொன்றுள்ளனர்.

அப்போது சிலர், ‘தெரு நாய்களை அடித்துக் கொல்லக் கூடாது, குடும்பக் கட்டுப்பாடு வேண்டுமானால் செய்துவிடுங்கள், தெரு நாய்களை அடித்துக் கொல்ல யார் அதிகாரம் கொடுத்தது’ என்று கேட்டுத் தடுத்துள்ளனர். இந்நிலையில், அடித்துக் கொல்லப்பட்ட நாய்கள் தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், தெரிவித்தபோது கடந்த இரண்டு நாட்களாக பட்டீஸ்வரம் ஊராட்சி தெருக்களில் சுற்றித் திரியும் 40க்கும் மேற்பட்ட தெருநாய்களை நள்ளிரவில் கம்பி சுருக்கு வைத்து அடித்துக் கொன்றுள்ளனர். தெரு நாய்களை ஏன் அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் ஊராட்சித் தலைவர் உத்தரவுப்படிதான் தெருநாய்களைப் பிடிப்பதாகக் கூறுகின்றனர். எனவே, தெரு நாய்களை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதுகாக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: தலைக்கேறிய போதை… நடுரோட்டில் படுத்து ரகளை செய்த பெண்.. உச்சி வெயிலில் அட்டகாசம்..!

இது குறித்து ஊராட்சி தலைவர் வெற்றிச்செல்வி கூறியபோது, ​​பட்டீஸ்வரம் ஊராட்சியில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டதாகவும் சாலையின் குறுக்கே அடிக்கடி பாய்ந்து இருசக்கர வாகனம் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி விடுவதால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவின் பெயரில் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

என் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக சிலர் தெருநாய்களை பிடித்தவர்களை முற்றுகையிட்டு தகராறு செய்தார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டு தெருநாய்கள் பிடிப்பதை நிறுத்திவிட்டோம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link