வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தலையணி

புதுச்சேரி: புதுச்சேரியில் அளவுக்கு அதிகமான பார்கள், மதுபான கடைகள் திறக்கும் என்.ஆர்.காங்., பா.ஜ., அரசை கண்டித்து இளைஞர் காங்., சார்பில் நேற்று கலால் துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார். காங்., தலைவர் சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

சமீபத்திய தமிழ் செய்திகள்

புதுச்சேரியில் மதுபானம் ஆறாக ஓடுவதற்கு போலி சித்தர் ரங்கசாமி தான் காரணம். ஆன்மிக பூமியை தனது சுய நலத்திற்காக போதை பூமியாக மாற்றி விட்டார். மக்கள் சாலையில் நடக்க பயப்படுகிறார்கள். தங்கள் குடியிருப்பு அருகே பார்கள் திறக்கக்கூடாது என முதல்வரை சந்தித்து கூறினால், இன்று 100 பார்கள் வரும் என ஆணவத்துடன் கூறுகிறார். மதுபான வருவாயில் ஆட்சி நடக்க வேண்டுமா?

‘பெஸ்ட் புதுச்சேரி’ உருவாக்குவதாக கூறி ‘ஒஸ்ட் புதுச்சேரி’யை உருவாக்கி உள்ளனர். பார்களில் அதிகாலை வரை குத்தாட்டம் போடுகின்றனர். சுற்றுலா பயணிகளை கவர பீர் பஸ் விடுகின்றனர். போதை கும்பலால் ஒரு பொறியாளர் இறந்துள்ளார். அந்த தாய்க்கு அவர் ஒரே பிள்ளை. பொறியாளர் இறப்பிற்கு முதல்வர் ரங்கசாமி தான் பொறுப்பேற்க வேண்டும்.
மதுபான பார்கள் மட்டும் இன்றி 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி நீடித்தால் மேலும் 500 பார்கள் புதிதாக கொண்டு வருபவர் என்றார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கலால் அலுவலகத்தை காங்., கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசாருக்கு காங்., கட்சியிருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம்
Source link