திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குரும்பபட்டியை சேர்ந்தவர் கீர்த்தனா. இவரின் பெற்றோர் மதனகோபால், ராஜேஸ்வரி. கீர்த்தனாவின் தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கீர்த்தனா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயந்து வருகிறார். தற்போது உள்ள சூழலில் பெரும்பாலான பெற்றோர்கள் மனதில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு சிறு தயக்கம் இருந்து வருகிறது. ஆனால் பெற்றோர்களின் தயக்கத்தை உடைக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்துக்கொண்டு, அமெரிக்கா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் கீர்த்தனா.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயந்து வரும் மாணவ, மாணவிகளின் கலை திறமையை வெளிக்கொண்டு வர வட்டார மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை தமிழக அரசு நடத்தியது. இதன் மற்றொரு பகுதியாக கல்விசாரா மன்ற செயல்பாடுகளை அரசு பள்ளியில் உள்ள 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம், என 4 மன்றங்களை அமைத்து அதில் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறார் திரைப்படம் சார்ந்த தனிநபர் போட்டி, குழு போட்டி என 7 வகை போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன்.
இதையும் படிங்க : சுவையான அத்தோ இப்படித்தான் செய்யுறாங்க.. புதுச்சேரியை கலக்கும் பர்மா உணவுகள்!
உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)
இதில் கீர்த்தனா கல்வி சாரா மன்ற செயல்பாடு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதில் திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் மல்லி படத்தில் ஒரு காட்சியை இயக்கியதில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அ.குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கீர்த்தனா, ஒன்றிய, மாவட்ட அளவில் தேர்வு பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மாநில அளவில் சென்னையில் இறுதிப் போட்டிக்கு முன்பு 6 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, இறுதிப்போட்டியில் கீர்த்தனா உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு முதலிடம் பெற்றது. இதனால் அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை கீர்த்தனா பெற்றுள்ளார். மேலும் அரசு பள்ளியில் சிறந்த முறையில் படித்து தனது திறமையை வெளிக்காட்டி அயல்நாட்டிற்கு செல்லும் வாய்ப்பை பெற்ற கீர்த்தனாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: