தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு நீண்ட நாட்களாக இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள். நீங்கள் நன்மைக்காக போராட தயங்காதவர். மனகலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு. கவனம் தேவை.
தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.