தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர்கள் அம்பேத் ராஜா – சந்தியா தம்பதி. இவர்கள் இப்பகுதியில் பெட்டி தேனீக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்து அதை சந்தைப்படுத்தி ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக பெட்டி தேனீக்கள் மூலம் தேனை உற்பத்தி செய்து வரும் இவர்கள் தேனில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து அதனை விற்று மாத வருமானமாக 40 ஆயிரம் ரூபாய் வரை பெற்று வருகின்றனர்.
போன்றவர்களுக்கு பிறகு :
கால கட்டத்திற்கு பிறகு தேன் தேவை அதிகரித்து இருப்பதை அறிந்த இவர்கள் பெட்டி தேனீக்களின் மூலம் தேன் உற்பத்தி செய்து அதை தொழிலாகவும் மாற்றியுள்ளனர். ஆரம்பத்தில் கம்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி முழுவதும் தங்களுக்கு தெரிந்த இடங்களில் ஆங்காங்கே பெட்டி தேனீக்களை வைத்து தேனை உற்பத்தி செய்து வருகின்றனர். கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து வந்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

பெட்டி தேனீ வளர்ப்பு
தேனில் இத்தனை வகைகளா?
முருங்கைத் தேன், நெல்லி தேன், செம்பருத்தி தேன், இஞ்சி தேன், மலைத்தேன் என பெட்டி தேனீக்களில் பல வகைகள் உண்டு. தேன் பெட்டிகளை முருங்கை மரம் அதிகமாக இருக்கும் பகுதியில் வைத்தால் அதிலிருந்து தேன் உருவாகும்போது முருங்கையின் மனம் அந்த தேனில் இருப்பதால் முருங்கை தேன் என அழைப்பதுண்டு. இதேபோல் தென்னை, வாழை, செம்பருத்தி என்று பல பூக்கள் இருக்கும் இடத்தில் தேன் பெட்டிகளை வைக்கும்போது அதில் இருந்து உற்பத்தியாகும் தேனின் மனம் மாறுபடும்.
ஏலக்காய் தேன் உற்பத்தி :
அந்த வகையில் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் தேன் உற்பத்தி செய்து வந்த அம்பேத் ராஜா சந்தியா தம்பதியினர் கேரளப் பகுதியில் ஏலக்காய் தோட்டங்கள் அதிகமாக உள்ளதால் ஏலக்காய் தேன் உற்பத்தி செய்வதற்கு தேன் பெட்டிகளை எடுத்து இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பகுதியில் அவசிய வைத்துள்ளனர். ஏலக்காய் தோட்ட உரிமையாளர்கள் தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கை எளிதாக நடந்து தங்களுக்கு அதிக மகசூல் வேண்டும் என்ற காரணத்தினால் பெட்டிகளை வைக்க ஆர்வம் காட்டுவதாக அம்பேத்ராஜ் கூறுகிறார்.
அதிக லாபம் :
ஜனதா பெட்டிகள் மற்றும் ISI A வகை பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து வருவதால் கேரள காலநிலையை பத்து நாட்களுக்கு ஒரு முறை தேன் எடுக்கலாம் எனவும் தமிழகப் பகுதி இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை தேன் எடுக்கலாம் எனவும் கூறுகிறது. பெட்டியில் சராசரியாக 3 லிட்டர் முதல் ஏழு லிட்டர் வரை தேன் எடுக்க முடியும் எனவும் கூறுகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தேன் எடுப்பதற்கு உகந்த காலம் எனவும் கூறினர்.

பெட்டி தேனீ வளர்ப்பு
இயற்கையாகக் கிடைக்கும் பெட்டி தேன் தமிழகப் பகுதி காட்டிலும் கேரள மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை ஆவதாகவும், ஒரு லிட்டர் 900 ரூபாய் வரை விற்பனை ஆவதாகவும் கூறுகிறார். தேனில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து அதனைசந்தைப் படுத்தியும் வருகின்றனர் இந்த தம்பதிகள். மேலும் தேனீக்கள் வளர்ப்பதற்கு பெட்டிகள், தேன் எடுப்பதற்கான பிரத்தியோக ஆடைகள், பெட்டியுடன் தேனீக்கள் என அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த லாக்டவுன் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டாலும் இந்த தம்பதிக்கு ஏற்றத்தை கொடுத்துள்ளது. அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: