நடிகை ஜான்வி கபூர், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். ஜூனியர் என்டிஆரின் 30வது படமான அது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இந்தப் படம் பற்றி சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜான்வி கபூரின் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்நிலையில், ராம்சரணின் அடுத்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. புஜ்ஜி பாபு இயக்கும் இந்தப் படத்தில் கிராமத்து பெண் கேரக்டரில் ஜான்வி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

Source link