அஜித் படத்தையும், அப்டேட் கேட்கும் ரசிகர்களையும் என்றும் பிரிக்க முடியாது என்பது போல, அடுத்த படத்தின் அப்டேட் கேட்டு திருச்சி நகரம் போஸ்டர்களால் நிரம்பியுள்ளது.

வலிமை படத்திற்காக செல்லும் இடமெங்கிலும், காணும் அனைவரிடமும் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்ட சம்பவம் அரங்கேறியது. இனிமேல் வலிமை அப்டேட் கேட்க வேண்டாம் என நடிகர் அஜித்தையே அறிக்கை வெளியிட வைத்தது, இந்நிலையில், திருச்சி நகரில் போஸ்டர்களை ஒட்டி, லைகா நிறுவனத்திடம் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டுள்ளனர். அதில், “சீக்கிரமாக ஏகே 62 படத்தோட அப்டேட்ட விடுங்க லைக்கா… வெயிட்டிங்ல வெறி ஏத்தாதீங்க” என்று வாசகத்தையும் வைத்துள்ளனர்.

அஜித் நடிக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது எனவும், மகிழ் திருமேனி இயக்குகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், படத்தலைப்பு உள்ளிட்ட அப்டேட்கள் மார்ச் மாத இறுதியில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அஜித்தின் தந்தையின் மறைவால் தாமதமானது.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

இதையும் படிங்க; நடிகை கிருதி சானோனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

ஏப்ரல் மாதம் பாதியை நெருங்கிவிட்ட நிலையில், அஜித்குமாரின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதியாவது அப்டேட் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link