5 லட்சம் கொடுத்து காருக்கு பென்சி நம்பர் வாங்கிய சிரஞ்சீவி

13 ஏப், 2023 – 11:59 IST

எழுத்தின் அளவு:


சிரஞ்சீவி தனது புதிய காருக்கு ஃபேன்ஸி எண்ணைப் பெற ரூ.5 லட்சம் செலவு

கார், பைக் ஆகியவற்றை வாங்கும் போது சிலர் அதற்கான நம்பர்களை பேன்சி நம்பர்களாக வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்காக அரசு தரப்பில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. நம்பருக்கேற்றபடி கட்டணங்கள் அமையும்.

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சமீபத்தில் எம்யுவி ரக கார் ஒன்றை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த வண்டிக்காக ‘1111’ என்ற எண்கள் கேட்டு, அதற்காக சுமார் 5 லட்சம் வரை கட்டணம் செலுத்தி வாங்கியுள்ளார். அவர் வைத்திருக்கும் கார்கள் அனைத்திற்குமே ‘1111’ என்ற எண்கள்தான் இருக்கிறதாம்.

முன்னணி சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் அவர்களது சொந்த உபயோகங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளனர். சிலர் அதிகபட்சமாக 20 கோடி வரை மதிப்புள்ள கார்களை வைத்துள்ளனர். புதுப்புது மாடல்கள் வரும் போது பழைய கார்களை விற்றுவிட்டு புதிய கார்களுக்கு மாறுவதையும் சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.





Source link