வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தலையணி

விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் போஸ்டரை நாய் ஒன்று கிழித்த வீடியோ வைரலானது. அந்த நாயை கைது செய்யுமாறு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்போது இருந்தே தேர்தல் பணிகளை துவக்கியுள்ளனர். அதன்படி, ‘ஜெகன் அண்ணா எங்கள் எதிர்காலம்’ என்று வாசகத்துடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட போஸ்டர்களை அக்கட்சியினர் வீட்டு சுவர்கள், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், விஜயவாடா பகுதியில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை ஒரு நாய் கடித்து கிழித்துள்ளது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகியது.

சமீபத்திய தமிழ் செய்திகள்

அதனைத்தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பெண் தொண்டர்கள் இணைந்து அந்த நாய் மீது போலீசில் புகார் அளித்தனர். ஸ்டிக்கரை கிழித்தது மூலம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவமதித்ததாகக் கூறி, அந்த நாயையும், அந்த உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நாயை தேடி வருவதாக கூறப்படுகிறது.

விளம்பரம்




Source link