சென்னை: இந்தியாவில் அன்றாட கோவிட் தொற்று 11 ஆயிரத்தைக் கடந்தது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 11,109 பேர் புதிதாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 49,622 பேர் தற்போது நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று 10,158 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. நோய் தொற்று பாதிப்பால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். 6,456 தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link