பரவலால் வெளிநாட்டு வேலை இழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு “புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்” என்னும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி புரிந்து கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்.
அவர்கள் கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலினால் 1.1.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும். குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 க்கு மேல் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். வாணிக மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிக பட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும் உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
ரூ.15 லட்சமாகவும் இருக்கும்.
பயனாளர் தம் பங்காக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10% மற்றும் பெண்கள், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5% செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும். அரசு, திட்டத் தொகையில் 25% அதிக பட்சம் ரூ.2.5 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்ட பின்னர் கடனுக்கு சரிக்கட்டப்பட்டது.
கடன் வழங்கப்பட்டது 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். இத்திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் வாயிலாகச் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்டத் தொழில் மையங்களில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்ய வேண்டும்.
எனவே, வெளிநாடுகளில் இருந்து கோவிட் 19 பெருந்தொற்றுப் பரவலால் வேலையிழந்து நாடு திரும்ப விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் தம் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தினை நேரடியாகவோ, 04146 223616, 9443728015 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: