நான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச், சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து வாங்கினேன். அதற்கான பில் இதோ…” என பில்லைக் காட்டினார். மேலும் தொடர்ந்தவர், “எனது வங்கி கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் இன்று இணையதளத்தில் வெளியிடுகிறேன். ஆனால் நேற்றே ஒரு போலி பில்லை பதிவிட்டது திமுக ஐடி விங்க். அதையும் நம்பி பரப்பி வருகிறார்கள். தற்போது நான் ஒரு வீடியோவை வெளியிடுகிறேன். அதில் திமுக கட்சியை சார்ந்தவர்களின் சொத்து விவரங்கள் உள்ளன.

அதை நன்கு பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து வாருங்கள். அதற்காக ஒருவாரம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு 20 அல்லது 21-ம் தேதிகளில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறேன். அப்போது உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். சுமார் 15 நிமிடங்கள் ஓடிய வீடியோவில் பல திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள் காட்டப்பட்டுள்ளன

அதில், ஜெகத்ரட்சகன் ரூ.50,219 கோடி, எ.வ வேலு ரூ.5,442 கோடி, கே.என் நேருவிடம் ரூ.2,495 கோடி, கனிமொழியிடம் ரூ. 830 கோடி, கலாநிதி மாறனிடம் ரூ.12,450 கோடி, கதிர் ஆனந்திடம் ரூ.579 கோடி, கலாநிதி வீராசாமியிடம் ரூ.2,923 கோடி, உதயநிதியிடம் ரூ.2,039 கோடி, சபரீசன் ரூ.902 கோடி, பொன்முடி ரூ.581 கோடி, அன்பில் மகேஷிடம் ரூ.1023 என்று இருந்தது. .Source link