சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 10 பேர், கல்வடங்கம் காவிரி ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன் மற்றும் மணிகண்டன்ஆகிய 4 மாணவர்கள் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் தத்தளித்தனர். நீச்சல் தெரியாததால் அவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கினர். அவர்களை காணாததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே கரையேறி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டதால், இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் முத்துசாமி ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)
சேலம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளனர். pic.twitter.com/enHwLSW2bl
— CMOTamilNadu (@CMOTamilnadu) ஏப்ரல் 13, 2023
எஞ்சிய இருவரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: