தமிழகமெங்கும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் அதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு உலகெங்கும் பரவி உலக நாடுகளையே ஆட்டுவித்த கொரானா பெருந்தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்திய பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது. பின்னர், தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்ட பின்படியாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

விருதுநகரில் 60 படுக்கைகளுடன் கூடிய வார்டு தயார்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் அனைவரும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் மீண்டும் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 10000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசோ பொதுமக்களை மீண்டும் முகநூல் அணிய அறிவுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க : ”புதுக்கோட்டையில் ஒரு ராமானுஜர்” மாணவர் கிஷோர் குமாரின் வியக்க வைக்கும் கணித அறிவு!
சமீபத்தில் கூட விருதுநகரில் சிறை கைதி உட்பட மேலும் இருவருக்கு மேலும் உறுதி செய்யப்பட்டது. இப்படி விருதுநகரை பொருத்தவரை மெல்ல அதிகரித்து வரும் நிலையில், தற்போது அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது மாவட்ட சுகாதாரத்துறை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது பற்றி பேசிய விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக 60 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வார்டு மற்றும் மூன்று மாதங்களுக்கு தேவையான ஊசி, மருந்து மாத்திரைகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: