அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.04.2022 அன்று வடக்கே உதித்த சூரியன் மலர் பூக்க வந்த பகலவன் நமது அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்து அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நாளை சமத்துவ நாளாக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண் 110 கீழ் அறிவித்தார்.

அதன்படி சமத்துவ நாள் உறுதி மொழியான சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும் சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்ட அவர்களுடைய உரிமைகளுக்காக ஒதுக்கப்பட்ட அவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நாம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்தவர் அம்பேத்கர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும் சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்போம் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழியினை அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டத்தில் குமாரதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link