திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பலத்த ஒலியுடன் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், அதற்கும் நில நடுக்கத்திற்கும் தொடர்பு இல்லை என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. வேடசந்தூர் , கீரனூர் பகுதிகளில் மார்ச் 28ஆம் தேதி முதல் அதிர்வுடன் கூடிய சத்தம் 9 முறை உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோரிக்கையின் பேரில், புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் துறையின் வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். அதிர்வு உணரப்பட்ட இடங்களை ஆய்வு செய்த குழுவினர், மக்கள் கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

இதையும் படியுங்கள்: இப்படி ஒரு திறமையா..! திண்டுக்கல் மாணவிக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு..!

ஆய்வுக் குழு தனது ஆய்வினை நிறைவு செய்த பிறகு, மாவட்ட ஆட்சியர் விசாகனுடன் கலந்துரையாடியது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலநடுக்கம் நடைபெற மிகக் குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் உள்ளது என ஆய்வுக் குழுவினர்.

எனினும் கீரனூர் பகுதியில் மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் உணரப்பட்ட நில அதிர்வில் , கட்டுமானம் செய்யப்படாத மண் மற்றும் கான்கீரிட் கட்டிடங்கள் சிறிய அளவில் விரிசல் எனவும், வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link