திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பீடி தொழிலாளர்களுக்கான மத்திய மருத்துவமனையில், பீடி சுற்றும் பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக மூன்று மாத கால பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேசுகையில், “முதலமைச்சர் ஏழை எளிய பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு சுயமாக தொழில் செய்து மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்க மகளிர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிர் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து ஹேர் விக் எனப்படும் தலைமுடியாலானசாதனங்களை தயாரிப்பதற்கான மூன்று மாத கால பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை சென்னை புற்றுநோய் மருத்துவமனையின் வழிகாட்டுதலின்படி எக்ஸ்டோஸ் என்னும் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : மேற்கு தொடர்ச்சி மலையில் எரியும் காட்டுத் தீ.. நேரில் ஆய்வு செய்த கோவை ஆட்சியர்..

உற்பத்தி செய்யும் ஹேர் விக்குகளை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவனமே விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி பயிற்சி நிறுவனத்தால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் உறுதியான வாழ்வாதாரமும் பயிற்சியாளர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.

இப்பயிற்சி பெற்றவர்கள் இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்தோ அல்லது சுயமாகவோ ஏர்விக் செய்யும் தொழிலை செய்து அதிக வருமானம் ஈட்டி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக பீடி சுற்றும் பெண்கள் 30 பேருக்கு இந்த மூன்று மாத காலப்பயிற்சி அளிக்கப்பட்டு, ஹர்விக் செய்வதில் திறமையானவர்கள் தயார் செய்யப்பட்ட பின் மேலும் 30 பெண்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து ஒவ்வொரு குழுவாக பயிற்சி அளிக்கப்பட்டு இப்பெண்ணின் மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் வருவாய் பெருகி பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link