விருதுநகர் மாவட்டம் முன்றீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. முன்னாள் இராணுவ வீரரான இவர் தற்போது முதல் முறையாகத் த்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எல்பிஜி கேஸ்க்கு மாற்றாக உணவுக்கழிவுகளில் இருந்து பயோ கேஸ் உருவாக்கும் தொட்டி தயாரித்து வருகிறார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் உள்ள உணவுக்கழிவுகளை கொண்டே கேஸ் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் செலவை குறைப்பதோடு கழிவுகள் வெளியேறுவதையும் கட்டுப்படுத்தலாம் என்கிறார் முனியசாமி.
திருவில்லிபுத்தூர் நகராட்சி குப்பைகள் அணைத்தும் தன் இருப்பிடம் அருகே கொட்டப்படுவதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்து கொண்டு அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என இருந்த போது, கேரளா சென்ற போது அங்கு இந்த தொழில்நுட்பத்தை பார்த்ததும் உடனே இதை நம் ஊரிலும் செய்யலாம் என்று கூறியவர் தற்போது இதையே சிறிய தொழிலாளி வீடுகளில் இந்த பயோ கேஸ் அடுப்பை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
வீட்டின் உணவு கழிவுகள் மக்கி அதில் உருவாகும் மீத்தேனை சமையல் எரிவாயுவாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாளைக்கு 1.30 மணிநேரம் சமைக்கலாம் என்றவர். சாதாரணமாக ஒரு வீட்டிற்கு இந்த பயோ கேஸ் பொருத்தம் 21000 வரை செலவாகும், வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட இதை பொருத்தி பயன் பெறலாம் என்று தெரிவித்தார்.
பயோ கேஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 99528 21696 என்ற எண்ணில் முனியசாமியை தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: