தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள கிருஷ்ணசுவாமி கோவிலில் சித்திரை மாதப் பிறப்பு, விஷு எனும் மலையாள புத்தாண்டையொட்டி கனி காணும் நிகழ்வு நடைபெற்றது.

கிருஷ்ணசுவாமி கோவிலில் வைக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை முன்பு வெள்ளரிக்காய், கத்திரிக்காய் வாழைக்காய், பூசணிக்காய், தக்காளி, உருளை என காய்களால் கோலமிட்டு அதன் முன்பு முக்கனிகளான மா, பலா, வாழை பழங்களை வைத்து வழிபாடு செய்தனர். அதிகாலை 3 மணி முதல் மக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கனிகளும் பலவித காய்களும் வழங்கப்பட்டன.

சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த கோவிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கனி காணுதல் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இதையும் படிங்க : இடிந்து விழும் அபாயத்தில் பேருந்து நிறுத்தம்.. தென்காசி வடக்கு புதூர் கிராம மக்கள் அவதி..

கனி காணுதல் நிகழ்வு

கன்னியாகுமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் இந்த கனி காணுதல் நடைபெறுவது வழக்கம். வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை இப்படி பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுகளை வைத்து, அதன் மேல் தங்கம், வெள்ளி நகைகளை வைத்து அலங்கரிப்பார்கள்.

மகிழ்ச்சி பொங்கும்

வருடப்பிறப்பிற்கு முதல்நாள் இரவே பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து விடுவார்கள். விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்து சென்று, அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கச் சொல்வார்கள். போன்ற மங்கலப் பொருட்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

குளித்து, புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்ட பின், பெரியவர்கள், தட்டில் வைத்த புது ரூபாய் நோட்டுகளை எடுத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள் இத்தனை கை நீட்டம் என்று அழைக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன் மூலம் ஆண்டுதோறும் பணம் குறையாமல் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த பழக்கம் மலையாள மக்களிடம் இருந்து வந்ததுதான் அன்றைய தினம் கனி காணுதலையும், கை நீட்டம் நிகழ்ச்சியையும் பார்க்கும் போது புது வருட தினத்தன்று உற்சாகத்தைத்தான் தருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link