மெட்ரோ பணிக்காக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள சதுப்பு நிலங்களில் மின் கோபுரத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதுப்புநிலங்கள், இயற்கையாகத் தண்ணீரைச் சேமித்து வைக்கும் அமைப்பு. மழைநீரைச் சேகரிக்கும் இடமாகவும், நீர்வாழ் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்விடமாகவும் இருக்கிறது. ஆனால், வளர்ச்சித் திட்டங்கள் சதுப்பு நிலங்களின் வளமான சூழலை சீரழிக்கிறது. குப்பைக்கிடங்கு, தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் என்று, சென்னையின் சதுப்புநிலங்களை வளர்ச்சி எனும் பெயரில் சூறையாடுகிறது.

தற்போது அங்குள்ள மின்கோபுரங்களை மெட்ரோ பணிக்காக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவும் சதுப்புநிலத்தை பாதிக்கக்கூடியது என்று விவரிக்கிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகர்.
அவர், “சென்னை மெட்ரோ பணிக்காக மின்கோபுரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கே மின் கோபுரங்கள் இல்லாத வகையில் அகற்றினால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவற்றை அகற்றினால் சதுப்பு நிலங்களுக்குள்ளேயே மின் கோபுரங்கள் கிடக்கும். இதுதான் சதுப்பு நிலங்களுக்கு பேராபத்தை விளைவிக்கும்.