சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வரும் ஏப்ரல் 26 முதல் 28 வரை ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியை ஐஈடி (IED) கம்யூனிகேஷன்ஸ் நடத்துகிறது.
இந்த செய்திகளைச் சந்தித்த, ஐஈடி கம்யூனிகேஷன் லிமிடெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் எம் ஆரோக்கியசாமி கூறினார்: “பெரும்பாலும் மும்பையில் நடத்தப்பட்டு வந்த ஆட்டோமேஷன் எக்ஸ்போ கண்காட்சி தற்போது முதல்முறையாக சென்னையில் நடத்தப்பட்டது.
ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியில் நவீன ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த துறையில் உள்ள வல்லுநர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் சக தொழில்துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
153 ஸ்டால்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சி, பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மேக் இன் இந்தியா மற்றும் மேட் இன் இந்தியா நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. அனைத்து வர்த்தக பார்வையாளர்கள் மற்றும் பொறியியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி இலவசம்” என்று அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் கண்காட்சியின் இயக்குனர் ஜோதி ஜோசப் ,சாய்ரமேஷ், தம்பி மேத்யூ, பி.ஸ்ரீகர், என்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.