ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே.கே. கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘விமானம்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். சிவபிரசாத் யானலா இயக்கியுள்ளார். மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார். ஜூன் 9-ல் வெளியாகும் இதன் முதல் தோற்றக் காணொலியை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. விமானத்தில் பறக்க விரும்பும் மகனின் ஆசை, வறுமையில் இருக்கும் தந்தையால் நிறைவேற்ற முடிந்ததா என்பது கதை என்று கூறப்படுகிறது.