சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்கிற மாற்றுத்திறனாளி நீச்சல் வீரராவார். இவர் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் – வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ் (29). இவர் சிறு சிறுவயதிலேயே மன வளர்ச்சி குன்றியவராகவும் இரு கால்களும் செயலிழந்த நிலையில் “செரிபரல்பாசி” என்ற பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இவரால் பேசவோ தானாக தனது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. இருகால்களும் செயலிழந்த நிலையில் இருப்பதால் நான்கு வயது முதல் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

இவருக்கு, “ஸ்பெரஸ்ட் ஸ்ட்ரோக்” முறையில் நெஞ்சை அசைத்து நீந்தும் முறையில் கற்றுக்கொடுக்க தொடங்கினார். நீச்சலில் இவர் கொண்ட ஆர்வத்தினால் இவரின் பெற்றோர், இவரை ஒரு நீச்சல் வீரராக்க வேண்டும் என்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள வைத்துள்ளனர். மேலும், இவர் கடலூர் – பாண்டிச்சேரி இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் தேசிய விருது பெற்றுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையில் உள்ள பாக்ஜலசந்தி கடல் பகுதியை நீந்தி சாதனை புரிய நேற்று காலை 11 மணி அளவில் தலைமன்னாருக்கு அவரது குழுவினர் புறப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று மாலை 5 மணி அளவில் தலைமன்னாரிலிருந்து நீந்ததொடங்கிய இவர் தனுஷ்கோடிக்கு இன்று மதியம் 1:30 மணிக்கு வந்தடைந்தார். இவர், 20 மணிநேரம் 20 நிமிடங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

நீச்சல் அடிப்பவர்கள் கை, கால்களை அசைத்து பிரிஸ்டைல் ​​முறையில் நீந்துவார்கள், ஆனால் இவர் கால்களை அசைத்து நீந்த முடியாது என்பதால் நெஞ்சை அசைத்து “ஃப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்” முறையில் நீந்திய முதல் மாற்றுத்திறனாளி என்ற உலக சாதனை படைத்துள்ளார். இவருக்கு யுனிவர்சல் புக்ஆப் ரெகார்ட்ஸ்க்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link