திண்டுக்கல் : ‘பிளஸ் 2க்கு பின் எதிர்காலத்தில் எந்த படிப்புக்கு, எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம்’ என்ற அரிய ஆலோசனைகளை வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்சூடன்இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே.,மஹாலில் இன்று (ஏப்.,15), நாளையும் நடக்கிறது. (ஏப்.,16) கோலாகலமாக நடக்கிறது.
பிளஸ் 2 முடித்து உயர்கல்வி தேர்வு செய்யும்மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்வில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
இதில் நீட், ஜே.ஐ.ஐ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், ஓபன்ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., கிளவுட் கம்ப்யூட்டிங், மெட்டாவர்ஸ், சி.எஸ்., ஐ.டி., டேட்டா. சயின்ஸ், பிக் டேட்டா, மிஷின் லேர்னிங் படிப்புகளை எங்கும் படிக்கலாம், அதற்கான தகுதிகள் என்ன, எந்த கல்லுாரிகளின் சிறந்தவை என்பது குறித்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான வாய்ப்புகள், சட்டம், சி.ஏ., படிப்பதால் என்னென்ன வாய்ப்புகள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பிரத்யேக கல்வி நிறுவனங்கள் போன்ற தலைப்புகளில் 10க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கல்வியாளர்கள் நேரடியாக ஆலோசனை வழங்குகின்றனர்.
அனைத்தும் ஒரே இடத்தில்
தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் கண்காட்சியில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரை அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம். மாணவர்களே உயர்கல்வி குறித்து தெளிவு பெற, வேலைவாய்ப்பு தரும் படிப்புகள், நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்து உங்கள் எதிர்காலம் ஜொலிக்க நிகழ்ச்சிக்கு வாருங்கள்.
பதில் சொன்னால்பரிசு உண்டு
காலை 10:00 மணி, மாலை 4:00 மணிக்கு நடக்கும் கருத்தரங்கில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். சரியான விடை அளிப்பவர்களுக்கு கருத்தரங்கு முடிவில் லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக அளிக்கப்படும். காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை கல்வி நிறுவனங்களின் கண்காட்சி நடக்கும்.
தினமலர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் பவர்டு பை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா பல்கலை, நாலெட்ஜ் பார்ட்னராக தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட் ஆப் இந்தியா செயல்படுகிறது. அனுமதி இலவசம்.
ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்ய www.kalvimalar.com இணையதளத்தை அணுகலாம் அல்லது 91505 74441 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ‘Hi’ என டைப் செய்து அனுப்பலாம்.