நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் சாராத படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்பிஎஸ் படிப்பிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு 2023-24ம் ஆண்டு கல்வி ஆண்டில், இந்த கல்லூரியில் மருத்துவம் சாராத பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டது, அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த கல்வியாண்டில், 3 ஆண்டு பி.எஸ்.சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), சுவாச சிகிச்சை (ரெஸ்பிரேசன் தெராபி), அறுவை அரங்கம் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம் (ஆபரேசன் தியேட்டர் மற்றும் அனெஸ்தீசியா டெக்னாலஜி), மருத்துவ ஆய்வகம் (மெடிக்கல் லேபாரட்டரி) , சிக்கலான பராமரிப்பு தொழில்நுட்பம் (கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி) ஆகிய 5 இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவு, டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னோசிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய 2 டிப்ளமோ படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் (எமர்ஜென்சி கேர் டெக்னீசியன்), மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர் (அனெஸ்தீசியா டெக்னீசியன்), ஆபரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர் (ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியசன்), எலும்பியல் தொழில்நுட்பவியலார் (ஆர்த்தோபோடிக் டெக்னீசியன்), பல்நோக்கு மருத்துவ பணியாளர் (அமல்டிபி பர்பஸ்) சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த பாடல்கள் சேர்க்கை சம்மந்தமான விபரங்களை https://tnmedicalselection.net என்ற வெப்சைட்டில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: