பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கட்டிப்போட்டுவிட்டு 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணியாற்றி வரும் உதயகுமார், தனது குடும்பத்தினருடன் பழனி அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவரது மகளும், மனைவியும் சென்னைக்கு சென்றதால் இவர் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவரை கத்தியால் தாக்கி, கட்டிப்போட்டுள்ளனர்.

தொடர்ந்து வீட்டில் இருந்த 100 சவரன் தங்க நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். கொள்ளையர்கள் சென்ற பிறகு மருத்துவர் உதயகுமாரின் கூச்சல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்து, உதயகுமாரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர் உதயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கை விரல் நரம்பு அறுக்கப்பட்டதால், மதுரை தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

இதையும் படிங்க: இப்படி ஒரு திறமையா..! திண்டுக்கல் மாணவிக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு..!

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், டிஐஜி அபிநவ்குமார் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில் பழனி அண்ணாநகரில் வசிக்கும் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை கத்தியால் தாக்கி 100சவரன் நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்ததோடு ஹார்ட் டிஸ்க்கையும் திருடி சென்றுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வேறு சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில், பழனி டிஎஸ்பி சிவசக்தி, பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: அங்குபாபு நடராஜன்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link