”இதை ஒரு மல்ட்டி பர்ப்பஸ் கார்டு ஆகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்! இந்த Rupay NCMC கார்டுகள், உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் லிங்க் செய்யப்படும். அதாவது, இதை நீங்கள் டெபிட் கார்டு ஆகவும் பயன்படுத்தவும், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களிலும் இதை ஸ்வைப் செய்து பொருட்களைப் பர்ச்சேஸ் செய்து கொள்ளலாம். மேலும், டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தைப் பொருத்தவரை ஒரு வேலட் ஆகவும் இது செயல்படும்! மேலும், பொதுப்போக்குவரத்துப் பயன்பாட்டில் உள்ள சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இப்படி ஒரு முயற்சியை எடுக்கிறோம்!” என்கிறார், ராஜேஷ் சதுர்வேதி – சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் இயக்குநர்.

நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு

நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு

இந்த சிங்காரச் சென்னை கார்டை ஆன்லைனிலும் பெற்றுக் கொள்ளலாம். எந்த இணையப் பக்கத்துக்குள்ளே போய், உங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களைப் பதிவு செய்து சப்மிட் செய்து கொண்டால், உங்கள் கார்டு ரெடி. இதை வைத்து மும்பை, பெங்களூரு, டெல்லி உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோக்களிலும் பயன்படுத்தலாம்.Source link