ரயில்வே இருப்புப்பாதை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டுத்தொகை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனம் முதல் நகரி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்காக சலவாதி, தாதாபுரம், கருவம்பாக்கம், பெரப்பேரி, கீழ்மாவிலங்கை, ரோஷணை, மேல்பாக்கம், மேல்மாவிலங்கை, தமிழ்நாடு, புத்தனந்தல், வடம்பூண்டி, ஊரல் மற்றும் வெள்ளிபேட்டை ஆகிய கிராமங்களில் 12 தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 10/99)-ன்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தொடர் விடுமுறை.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மக்களால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இறுதி தீர்வத்தின் அடிப்படையில் 63% இழப்பீட்டுத் தொகை உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகை பெறவேண்டியுள்ள உரிமைக்கான பதிவு ஆவணங்கள், இறப்பு சான்றுகள், வாரிசு சான்றுகள் மற்றும் வங்கியில் அடமானம் மீட்கப்பட்ட பதிவு ஆவணங்கள் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 17.04.2023 முதல் 19.04.2023 வரை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை , ஜக்காம்பேட்டை கிராமத்தில் உள்ள திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே அவ்வமையம் தொடர்புடைய பட்டாதாரர்கள் பட்டா நகல், வில்லங்கச்சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலம் எனில் இறப்பு சான்று மற்றும் வாரிசு, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி சரியான ஆவணங்கள் சமர்ப்பித்து இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: