விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அரசு தரும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலை தேடுவோர்க்கு உதவி தொகை:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தோருக்கு மாதம் 200 ரூபாய், தேர்ச்சி பெற்றோருக்கு 300 ரூபாய், பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு 400 ரூபாய், பட்டப்படிப்பு முடிந்த இளைஞர்களுக்கு மாதம் 600 ரூபாய் என உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
யார் விண்ணப்பிக்கலாம்?
கல்வி தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்தோர், குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72000க்கும் குறைவாக இருப்போர் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக சுயதொழில் செய்வோர் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பயின்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
வயது வரம்பு:
எஸ்சி,எஸ்டி பிரிவினர் 45 வயதுக்குட்பட்டோர் மற்றும் இதர பிரிவில் 40 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேற்சொன்ன தகுதியுடையோர் இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaippu.gov.in என்ற நிறுவனத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் வருவாய் ஆய்வாளர் கையொப்பம் பெற்றுக் கல்விச் சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புக் நகல் முதலியவற்றை இணைக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் பட்சத்தில் மேற்சொன்ன உதவி தொகை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: