கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 ஏப்ரல், 2023 09:50 AM
வெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2023 09:50 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 ஏப்ரல் 2023 09:50 AM

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Asus நிறுவனத்தின் ROG போன் 7 சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. தற்போது இந்த சீரியஸில் இரண்டு போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே 5ஜி பொன்களாகும். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
தைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் Asus. டெஸ்க்டாப் கம்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்களை இந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. கடந்த 2018 முதல் Asus சார்பில் ROG சீரியஸ் போன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ROG போன் 7 சீரிஸ் வரிசையில் ROG போன் 7 மற்றும் ROG போன் 7 ஆல்டிமேட் போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த போன் கேமிங் பிரியர்களைக் கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ROG போன் 7 சீரியஸ் பொதுவான அம்சங்கள்
இந்த இரண்டு பொன்களும் பொதுவான அம்சங்கள் உள்ளன. அது குறித்து பார்ப்போம்.
- 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே
- 6,000mAh பேட்டரி
- 65 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- இருந்தும் 33 வாட்ஸ் சார்ஜர் தான் போனுடன் கொடுக்கப்படுகிறது
- 50+13+5 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் மூன்று கேமரா
- ஸ்னாப்டிராகன் – 8 ஜென் 2 சிப்செட்
ஆக்டிவ் கூலிங் ஃபேன் அக்சசரி: ROG போன் 7 அல்டிமேட் போன் விலை சற்றே கூடுதலாக உள்ளது. அதற்கு காரணம் இந்த போனுடன் ஆக்டிவ் கூலிங் ஃபேன் அக்சஸரி வழங்கப்படுகிறது. இது போனின் வெப்பத்தை தணிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு ஐபி54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. 3.5மிமீ ஹெட்போன் ஜெக்கை இந்த போன் உள்ளது.
விலை: 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட ROG போன் 7 மாடலின் விலை ரூ.74,999. அதுவே 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்ட ROG போன் 7 அல்டிமேட் மாடலின் விலை ரூ.99,999.
தொடங்குதல் #ROGPhone7series சமீபத்திய Qualcomm® Snapdragon® 8 Gen 2 மொபைல் பிளாட்ஃபார்ம் மற்றும் ஒரு பெரிய 6000 mAh ஸ்பிளிட் பேட்டரி கொண்ட ஒரு முதன்மை கேமிங் ஸ்மார்ட்போன், இந்த கேமிங் லெஜண்ட், வேலை நடந்த பிறகும் கூட நீண்ட கால கேம் விளையாடுவதற்கு வெல்ல முடியாத ஆற்றலையும் வேகத்தையும் உங்களுக்கு வழங்குகிறது.
— ASUS இந்தியா (@ASUSIndia) ஏப்ரல் 14, 2023
தவறவிடாதீர்!