2020-21, 2022 ஆண்டுகளுக்கான ஆனந்த விகடனின் சினிமா விருதுகள் விழா மிக பிரமாண்டமான முறையில் மார்ச் 30-ம் தேதி சென்னையில் அரங்கேறியது. கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஏ.ஆர்.ரஹ்மான் எனத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஏப்ரல் 16 & 23, ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதுதொடர்பான ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதில் மேடையிலேயே கமல் ரசிகர்கள் மணிகண்டன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஜாலியாக மோதிக்கொள்ளும் வீடியோ செம வைரல். கமலின் மிகத்தீவிர ரசிகர் என லோகேஷ் சொல்லிக்கொள்வதை என்னால் ஏற்கமுடியாது. அது நான் தான் எனக் கமலை மேடையில் வைத்துக்கொண்டே நடிகர் மணிகண்டன் சொல்ல, சில நிமிடங்களுக்குப் பிறகு மேடையேறிய லோகேஷ், ‘எத்தனை மணிகண்டன்கள் வந்தாலும் சட்டையைக் கிழித்துக்கொண்டு சண்டைபோட நான் ரெடி. அது எனக்கான இடம்’ எனச் சொல்ல மேடை கலகலத்தது. அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு…

இன்னும் பல சுவாரஸ்யங்கள் அடங்கிய விழாவை நாளை மாலை 3 மணிக்கு விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள்!



Source link