அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது லாஷான் தாம்சன் என்ற நபர், 2022-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று அட்லாண்டாவில் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஃபுல்டன் கவுன்ட்டி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பரிசோதனைக்குப் பிறகு தெரியவர, அவர் மனநலப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செப்டம்பர் 13, 2022 அன்று, தாம்சன் தனது சிறை அறையில் நினைவிழந்த நிலையில் எந்த சலனமும் இன்றி கிடந்துள்ளார். உடனே அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தாம்சனின் வழக்கறிஞர், “மூட்டைப்பூச்சிகள் அவரை உயிருடன் தின்றதால்தான், அவர் இறந்துவிட்டார்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மரணம்

மரணம்
சித்தரிப்புப் படம்

இது குறித்து தாம்சன் குடும்பத்தினரின் வழக்கறிஞர் மைக்கேல் டி.ஹார்பர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், “தாம்சன் வைக்கப்பட்டிருந்த சிறை சுகாதாரமற்ற மூட்டைப்பூச்சிகள் நிறைந்திருந்தன. அவரை மூட்டைப் பூச்சிகள் உயிருடன் தின்றன.



Source link