
மெக்ஸிகோவில் வாட்டர் பார்க் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

சூடானில் ராணுவ வீரர்களுக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

ஜெர்மனியில் இயங்கி வந்த கடைசி மூன்று அணுவுலைகளையும் அந்த நாடு தற்போது நிறுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யப் போரினால் எழுந்த எரிசக்தி தட்டுப்பாட்டைச் சரிசெய்ய, புதைப்படிவ எரிசக்தியை அந்த நாடு நாடியுள்ளது.

அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லா ஷான் தாம்சன் என்ற கைதி ஒருவரை, உயிரோடு மூட்டைப் பூச்சிகள் கடித்திருக்கின்றன. அதனால், அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மோசஸ் கிப்சன் என்ற நபர் தனது உயரத்தை அதிகரிக்க 1.35 கோடி ரூபாய்க்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதன் மூலம் தனது உயரத்தை 5 இன்ச் வரை அதிகரித்துள்ளது.

கிழக்கு காங்கோவில் கிளர்ச்சி அமைப்பு நடத்திய தாக்குதலில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கென்யாவில் மாணவர் ஒருவர் புர்கா அணிந்து மகளிர் செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. தனக்குப் பணத் தேவை இருந்ததால், இதுபோல் செய்ததாக அந்த நபர் கூறியிருக்கிறார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, அவர் அருகே பைப் போன்ற குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் காயங்கள் ஏதுமின்றி தப்பினர்.

இங்கிலாந்தில், முதலாம் உலகப்போரில் இந்தியர்கள் பங்கேற்றதைக் குறிக்கும் ஓவியத்தை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு தற்காலிகமாகத் தடைவிதித்துள்ளது. வரலாற்றில் முக்கியமான ஓவியம் என்பதால் அதைப் பாதுகாக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜெருசலேமின் தேவாலயத்தில் நடந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான புனித தீ சடங்கில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.