மும்பை: முதுகுவலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் உடல் நிலை குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா, முதுகுவலி காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. பிசிசிஐ மருத்துவக்குழுவின் அறிவுரையின் படி காயத்துக்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்தார் பும்ரா. இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.



Source link