தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயில்.‌ இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்திருவிழா இரவு, பகலாக 8நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா வரும் மே 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடக்க உள்ளது.‌ இதற்கான கொடியேற்றம் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது.

இந்நிலையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ஏலம் தற்போது நடைபெற்றது. அதில் ராட்டினங்கள் ஒரு கோடியே 96 லட்சத்திற்கு ராட்டினங்கள் ஏலம் போனது. இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர், கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்ட நிலையில், ராட்டினம் ஏலம் ரூ.1.96 கோடிக்கு கிருஷ்ணன் என்பவர் ஒப்பந்தப்புள்ளி மூலம் எடுத்துள்ளார். அதுபோல கண்மலர் ஏலத்தை ரூ.4 லட்சத்திற்கு ஏலத்தின் மூலமும், உணவு கூடம் ஏலத்தை ரூ.25.01 லட்சத்திற்கு ஒப்பந்தப்புள்ளியிலும் பிரபு என்பவர் எடுத்துள்ளார்.

இவற்றில் ராட்டினம் ஏலம் எடுப்பதற்கான ஏலத்தொகை கடந்த ஆண்டு ரூ.1.36 கோடியே 700- க்கு போனது. ஆனால் இந்த ஆண்டு ராட்டினம் ஏலம் ரூ.1 கோடியே 50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட ரூ.49 லட்சத்து 99 ஆயிரத்து 300 கூடுதலாக ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link